இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் தலைவர் நியமனம் !

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் தலைவர் நியமனம் !

இலங்கை தமிரசு கட்சியின் அரசியல் குழு தலைவராகவும் பெரும் தலைவராகவும் மாவை சேனாதிராஜா பதவி வகிப்பதுடன் கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே. சிவஞானம் பதவி வகிப்பார் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானமானது, கட்சியின் யாப்பின் அடிப்டையில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, குறித்த கூட்டத்தில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வெளிநடப்பு செய்துள்ளார்.

இதன்போது, அவர், மத்தியகுழுவினால் பதில் தலைவரை நியமன் செய்ய முடியாது. அது பொதுகுழுவின் நடவடிக்கை என கூறி மத்திய குழுவின் குறித்த தீர்மானம் தவறானது என சுட்டிக்காட்டி அவர் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)