
யாழில் பெரும் சோகம்…. மனைவியின் இறுதிச் சடங்கை நோயாளர் காவு வண்டியில் இருந்து பார்த்த கணவர்
கிளிநொச்சியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த குறித்த பெண்ணின் இறுதி சடங்கை அவரது கணவர்
நோயாளர் காவு வண்டியில் இருந்து பார்த்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இருந்து இரணைமடு நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனமொன்று அதற்கு முன்பாக பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்ததுடன் அவர்களில் 2 வயது குழந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்தது.
விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார். பின்னர் அவர் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் 7 வயதான மற்றுமொரு சிறுமியும் அவரது தாய் மற்றும் தந்தையே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த தாயார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (02) உயிரிழந்துள்ளதுடன் தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.