
பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு
பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் தூதர் இந்திரா மணி பாண்டே மற்றும் பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரிய இடையே பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
பிம்ஸ்டெக் அமைப்புக்குள் பிராந்திய ஒத்துழைப்புக்கு இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
இலங்கையில் முக்கிய பங்கு வகித்த சுகாதார சேவைகள், மனிதவள மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட ஒத்துழைப்பின் முக்கிய துறைகள் குறித்து இந்தக் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை வளர்ப்பதற்கு இந்தத் துறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்திரா மணி பாண்டே சுட்டிக்காட்டினார்.
தாய்லாந்தில் நடைபெறவுள்ள 6ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பிம்ஸ்டெக் நாட்டு இயக்குநர் டொக்டர் சாஜ் யு. மெண்டிஸ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உதவி இயக்குநர் பிராத்தனா கௌஷாலியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.