
பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை
நாடளாவிய ரீதியில் பல இடங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக இந்த நீர் விநியோக தடை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.