
மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கைது
பலாங்கொடை, வலேபொட வளவ கங்கை வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 15 சந்தேக நபர்கள் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை வன வள பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஒரு குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணிக்கக்கற்களை வெட்டி எடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மின்சார மோட்டார், கம்பிகள் மற்றும் பிற உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வலேபொட வனத்திலுள்ள ஆற்றுப்பகுதிக்கு அனுமதியின்றி நுழைந்து, சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka