
சாய்ந்தமருதில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று (16) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வினை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா ஆரம்பித்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் கலந்து கொண்டார்.


இதில் சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கல்முனை மாநகர சபை ஊழியர்கள்
மற்றும் உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், முப்படை அதிகாரிகள் உட்பட உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நூருல் ஹுதா உமர்
CATEGORIES Sri Lanka