
முதியோர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்க தீர்மானம்
அரசாங்கத்தினால் எந்தவிதமான உதவித்தொகையையும் பெற்றுக்கொள்ளாத 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா உதவித்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தேசிய முதியோர் செயலகம் வெளியிட்டுள்ளது.
குறித்த உதவித்தொகை கொடுப்பனவு இன்று (20) முதல் லழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, இந்த மாதத்திற்கான உதவித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள உதவித்தொகைகளை தபால் நிலையங்கள் மற்றும் உப தபால்நிலையங்கள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு அஸ்வெசும பெறும் குடும்பங்களிலுள்ள முதியோர்களைத் தவிர்த்து, இதுவரை உதவித்தொகையைப் பெறாத முதியோர்களுக்கு மட்டுமே இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என்று தேசிய முதியோர் செயலகம் மேலும் சுட்டிக்காட்டுகிறது.