
வீடு மற்றும் காணியுரிமை பிரச்சினைக்கு சிறந்த தீர்வினை எமது அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும்
பெருந்தோட்ட உட்கட்டமைப்புக்காக 3,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீடு மற்றும் காணியுரிமை பிரச்சினைக்கு சிறந்த தீர்வினை எமது அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் கம்முதாவ திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு ஒரு வீடு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணத்தை ரணசிங்க பிரேமதாசவின் மகனான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட வேண்டும் அல்லது பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராசா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான 5 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் , ”2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன்சார்ந்த திட்டமாகவே காணப்படுகிறது. 200 ஆண்டுக்கான பின்னணியை கொண்டுள்ள எமது மக்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மலையக தமிழ் சமூகம் என்று உயரிய அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
மலையக கல்வி அபிவிருத்திக்கு வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் 187 தமிழ் பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் 395 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 90 பாடசாலைகள் பாலர் பாடசாலைகளாகும்.
பெருந்தோட்டங்களில் உள்ள பாடசாலைகள் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும். பாராளுமன்றத்தில் தற்போது கூச்சலிடும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கடந்த காலங்களில் பதுளை தமிழ் வித்தியாலயத்தின் அதிபரை மண்டியிடவைத்து மலையக கல்வியை மலினப்படுத்தினார்.
பெருந்தோட்ட உட்கட்டமைப்புக்காக 3700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடு மற்றும் காணியுரிமை பிரச்சினைக்கு சிறந்த தீர்வினை எமது அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் கம்முதாவ திட்டம் அமுல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு ஒரு வீடு கூட கிடைக்கவில்லை.
இதற்கான காரணத்தை ரணசிங்க பிரேமதாசவின் மகனான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட வேண்டும். அல்லது பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.
கடந்த அரசாங்கங்கள் எமது மக்களை வாக்கு தேவைக்காகவே பயன்படுத்தின. பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
1700 ரூபாய் சம்பளம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல திட்டங்கள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது . அவற்றை சிறந்த முறையில் செயற்படுத்துவோம்.” என தெரிவித்துள்ளார்.