
பல பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின் தரம்
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் இன்று (28) காற்றின் தரம் மிதமான நிலையிலும், கொழும்பு 07, கண்டி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
