
புனித ரமலான் நோன்பு காலம் இன்று முதல் ஆரம்பம்
இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் இன்று காலை முதல் புனித ரமழான் மாதத்துக்கான நோன்பை நோற்க ஆரம்பித்துள்ளனர்.
ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்றுமுன்தினம் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
எனினும் புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை நேற்றுமுன்தினம் தென்படவில்லை எனக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் நேற்றைய தினம் (01) மஹ்ரிப் தொழுகையுடன் புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ளது.