
குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் பாதிப்பு
புசல்லாவை, மெல்போர்ட் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி எட்டு தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மதியவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் புசல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மெல்போர்ட் தோட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka