
ஆணொருவரின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதடி ஒழுங்கையில் இந்திய துணை தூதுவர் காலத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
குறித்த நபர் யாழ் பெருமாள் ஆலயத்தில் கணக்காளர் ஆக பணிபுரிந்து வரும் சூழலில் கடந்த மூன்று மாதகாலமாக தனிமையில் வசித்து வந்துள்ளார். 41 வயதான இருபிள்ளைகளின் தந்ததையே இவ்வாறு இன்று (05) காலை சடலமாக மீட்கபட்டார்.
இது தொடர்பில் யாழ்பாணம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka