
விளையாட்டுதுறை அமைச்சருக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
சீனத் தூதுவர் கி ஜெங்ஹோங் மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (12) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சில் நடைபெற்றது.
இலங்கையில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களின் வளர்ச்சிக்கு சீன அரசாங்கம் ஆதரவை வழங்கும் என்று சீனத் தூதர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.
இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.