சக்தித் திருமகன் படத்தின் டீசர் வெளியானது

சக்தித் திருமகன் படத்தின் டீசர் வெளியானது

`நான்’ படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் மக்களிடையே எதிர்பார்ப்பு வரவேற்பை பெறவில்லை.

இதனிடையே விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான ‘ககன மார்கன்’ விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார் . இப்படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சக்தித் திருமகன் படத்தின் டீசர் நேற்று (12) வெளியாகியுள்ளது. அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)