
எல்ல – வெல்லவாய வீதியில் மண்சரிவு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, எல்ல – வெல்லவாய வீதியின் 12ஆவது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் நேற்று (13) மண் சரிந்து விழுந்ததால் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்ப்டுள்ளது, குறித்த வீதியை சீரமைத்து மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
CATEGORIES Sri Lanka