தேசபந்துவின் மனைவி மற்றும் மகனிடம் CID வாக்குமூலம் பதிவு !

தேசபந்துவின் மனைவி மற்றும் மகனிடம் CID வாக்குமூலம் பதிவு !

நீதிமன்றத்தைத் தவிர்த்து வரும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவி மற்றும் மகனிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

ஹோகந்தரவில் உள்ள வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு இந்த வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை நீதவான் நீதிமன்றம் கைது செய்ய உத்தரவு பிறப்பித்த போதிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இதுவரையில் முன்னாள் பொலிஸ்மா அதிபரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு அவரது வீட்டிற்குச் சென்ற போதிலும், அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வீட்டை தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தி வந்த அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை தேசபந்து தென்னகோனின் மகன் மற்றும் மனைவியிடம் விசாரணை நடத்தியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)