மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் பலி

மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் பலி

கம்பளை, கண்டி பிரதான வீதியில் கல்கெடியாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பத்தொன்பது வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பளை, கண்டி வீதியை சேர்ந்த அகமட் ரிஸ்வி மொஹமட் ரிஹாம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த அவர், கம்பளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டியின் அக்குரணைப் பகுதியில் பணிபுரியும் இந்த இளைஞன், நேற்று மாலை (18) தனது பணியிடத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து இடம் பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

காரின் தவறான பாதையில் வந்து விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது, மேலும் காரின் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பளை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி நந்தன குமாரவின் அறிவுறுத்தலின் பேரில், விசாரணை முன்னேடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)