
உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகமாக ஆர்.பி.எச். பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, நாளை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறைவரி திணைக்களத்தின் 39வது ஆணையாளர் நாயகமாக அவர் செயற்படவுள்ளார்.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய டபிள்யூ.ஏ.எஸ்.சந்திரசேகர 2025-02-28 முதல்அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
CATEGORIES Sri Lanka