
கடுகஸ்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு
கண்டி, கடுகஸ்தோட்டை, குஹாகொட பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் உடனடியாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், காயமடைந்தவர் குறித்த வைத்தியசாலையின் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவரவில்லை. இதுகுறித்து கடுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

