
வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு தன்சல் பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (04) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் செயல்படும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் மூலம் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்தச் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.
இலங்கை சுகாதார அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளதுடன், மேலதிக தகவல்களைப் பெறுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் படி, மே 30 ஆம் திகதி வெசாக் போயா தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

