
சிங் கீதம் படத்தின் டீசர் வெளியானது
தமிழ் சினிமாவில் ‘திக்கற்ற பார்வதி, ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் படத்தை இயக்கியுள்ளார்.
சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கும் அவரது 61-வது திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.
இதில், முன்னணி நடிகர்களாக அயான், அஹில்யா, ஷாலினி ஆகியோர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் நாக் அஸ்வின் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘சிங் கீதம்’ என பெயரிட்டுள்ளதாக டீசர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Cinema

