திசைகாட்டியின் மூன்றாம் கண் அரச சேவையின் சுயாதீனத்தைச் சீரழிக்கிறது

திசைகாட்டியின் மூன்றாம் கண் அரச சேவையின் சுயாதீனத்தைச் சீரழிக்கிறது

நமது நாட்டில் மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உப பிரதேச செயலாளர்கள் என நிர்வாக பரவலாக்கல் செயல்முறையில் இவர்கள் முக்கியமான பணியை ஆற்றி வருகின்றனர்.

9 மாகாணங்கள் மற்றும் 25 மாவட்டங்களிலும் அரச கொள்கையை கீழ் மட்டத்தில் முன்னெடுத்து வரும் இந்த நிர்வாக கட்டமைப்பை திசைகாட்டியின் அரசியல்மயமாக்கலுக்கும், கட்சி அரசியல் ஆணைக்கும் கீழ்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

பெலவத்தை அலுவலகத்தின் மூன்றாம் கண் முன்னெடுக்கும் திட்டமாகவே இது அமைந்து காணப்படுகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் Clean Sri Lanka ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் மூலம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Clean Sri Lanka ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு தேவையான எழுது பொருட்கள், அலுவலக உபகரணங்கள், மேசை நாற்காலிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அவ்வாறே அவர்களுக்கு, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்து சேவை உத்தியோகத்தர்களையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (03) விசேட கூற்றை முன்வைத்து தெரிவித்தார்.

திசைகாட்டியின் மூன்றாம் கண் அரச சேவையின் சுயாதீனத்தைச் சீரழிக்கிறது.

இது ஜனநாயக விரோத நடவடிக்கையாக அமைந்து காணப்படுவதோடு, நிர்வாக கட்டமைப்பிற்கான அவமானமாகவும் அமைந்து காணப்படுகின்றது. தற்சமயம் பிரதேச செயலாளர்களின் சங்கம் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இதன் மூலம் நேர்மையான, சுயாதீனமான, வெளிப்படைத்தன்மையான சேவையை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியாது.

இவ்வாறு நியமிக்கப்படும் Clean Sri Lanka ஒருங்கிணைப்பாளர்கள் ஆளுநர், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களை விடவும் மேலாக நடந்து கொள்ளும் நிலை கட்சி அரசியல் ஊடாக இங்கு உருவாக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த அரசியல்மயமாக்கலை நிறுத்த வேண்டும்.

அரச நிறுவனங்களின் சுயாதீனம் இதனால் இல்லாமல் போய் முற்றாக கட்சி அரசியல்மயமாக்கல் நடந்துள்ளது. இந்த மூன்றாம் கண் முன்னெடுக்கும் இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும்.

தனியாக அரசியல் நியமனங்களை வழங்காமல், ஏலவே அமைந்து காணப்படும் அரச கட்டமைப்பை, அதில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளை இதற்கு பயன்படுத்தலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு எதிராக குரல் எழுப்பிய பிரதேச செயலாளர்களுக்கு நன்றி.

ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதி அவர்கள், ஒருமுகப்படுத்தி காணப்பட்ட நிர்வாக கட்டமைப்பை பிரதேச மட்டத்தில் பரவலாக்கியது மக்களுக்கு சிறந்த அரச சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலாகும்.

அரச நிர்வாகத்தை அரசியல்மயமாக்குவதற்காக ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதி அவர்கள் இவற்றை உருவாக்கவில்லை. இதற்கு முன்னரும் இத்தகைய செயல்கள் நடந்தன. அரச ஊழியர்கள் இதனை தோற்கடித்தனர்.

இது குறித்து குரல் எழுப்பும் பிரதேச மற்றும் உதவி பிரதேச செயலாளர்களின் சங்கத்திற்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்கள் மீது மேலும் சுமையைச் சுமத்தி மீண்டும் ஒருமுறை எரிபொருட்களின் விலைகளை கூட்டியுள்ளனர்.

இந்த தருணத்தில் நாட்டில் எரிபொருட்களின் விலைகளை மீண்டும் கூட்டியுள்ளனர். இதனால் சமூகத்தில் ஏழ்மை மேலும் அதிகரிக்கும். இதனால் குழந்தை முதல் முதியவர் வரை 220 இலட்சம் பேரும் எண்ணற்ற பல நெருக்கடிக்கும் அசௌகரியத்திற்கும் ஆளாகியுள்ளனர். இது சமூகத்தில் சகல தரப்பினரையும் பாதிக்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் விலைக்கு எரிபொருட்களைத் தருவது எப்போ ?

எரிபொருட்களின் கொள்வனவு விலை, வரி விதித்த விலை மற்றும் இலாபம் பற்றி அரசாங்கம் இதுவரை எந்த தகவல்களையும் வெளிப்படுத்தவில்லை.

அனைத்தையும் மறைத்து வைத்துள்ளனர். துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் அதே விலைக்கு எரிபொருட்களை மக்களுக்குப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதியளித்தனர். ஆனால் இதுவரை எதுவுமே நடந்தபாடில்லை. விலை ஏற்றங்கள் நடக்கிறதே தவிர, விலை இறக்கங்கள் நடப்பதாக தெரியவில்லை.

மத்திய கிழக்கு போர்ச்சூழலுக்கு மத்தியில் உலகின் ஏனைய நாடுகள் எரிபொருட்களுக்கான வரிகளை குறைத்தும் நீக்கியும் இருக்கும் தருணத்தில், நமது நாட்டில் இதற்கு தலைகீழான செயலே நடந்து வருகின்றது. தேர்தல் காலத்திலும் அதற்கு பிறகும் அரசாங்கம் பொய்களைக் கூறி ஏலவே காணப்பட்ட செயற்பாடுகளையே செய்து வருகின்றது. புதிதாக ஒன்றையும் செய்தபாடில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் IMF இன் அடிமை.

தேர்தல் காலத்தில் எரிபொருட்களுக்கான விலை சூத்திரத்தை நீக்குவோம் என்று கூறினர். ஆனால் அரசாங்கம் IMF க்கு முழுமையாக கீழ்படிந்து விட்டது. அரசாங்கம் IMF இன் அடிமையாக மாறிவிட்டது. இப்போதாவது இந்த நெருக்கடிகரமான நிலைமைகளுக்கு மத்தியிலேனும் எரிபொருட்களுக்கான வரிகளை குறைக்க வேண்டும்.

நுகர்வோர் மக்களை நெருக்கடிக்கு உட்படுத்தாமல் இருக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இப்போதாவது நாட்டு மக்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள்.

பொய், ஏமாற்று, கவனத்தைத் திசைதிருப்பல் ஆகியவற்றைச் செய்யாமல் எரிபொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை நீக்கி மக்களை காக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )