
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 40,392 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், 22 பேர் உயிரிழந்தனர் எனவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டெங்கு நுளம்புகள் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

