அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் இன்று (28) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 1,415,584 பயனாளி குடும்பங்களுக்கு மொத்தமாக 11,234,713,750.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

மேலும், அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 618,440 பயனாளிகளுக்கு 3,092,200,000.00 ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.

அதேநேரம், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் ஜனவரி மாதக் கொடுப்பனவாக 248,454 பயனாளி குடும்பங்களுக்கு 2,235,137,500.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 68,183 பயனாளிகளுக்கு 340,915,000.00 ரூபா நிதி வழங்கப்பட்டு, அது அவர்களின் அஸ்வெசும கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )