
தெரு நாய்கள் பாதுகாப்பு வசதிகளை அறிமுகப்படுத்தல்
செல்லப்பிராணிகளை அடக்கம் செய்தல், தகனம் செய்தல் மற்றும் தெரு நாய்கள் பராமரிப்பதற்கான சேவைகளை வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் கொழும்பு மற்றும் பியகமை உள்ளூராட்சி அதிகார சபைகளில் முன்னோடிக் கருத்திட்டமொன்றை செயற்படுத்த ரூபா 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நகர மற்றும் புறநகரப் பிரதேசங்களில் வாழ்க்கை முறை மாற்றம் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, செல்லப் பிராணிகளை வளர்க்கும் போக்கு வேகமாக வளர்ந்து வருகிறது.
இதனுடன், செல்லப்பிராணிகள் இறக்கும் போது அவற்றை அடக்கம் செய்தல் அல்லது தகனம் செய்தல் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது.
எனவே, கௌரவமானதும் சூழல் நேசம் கொண்டதுமான பொறுப்பு வாய்ந்த மாற்று வழிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
அதேபோன்று, நகர்ப்புறங்களில் பரவலாகக் காணப்படும் தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளைப் பராமரிப்பதற்கான முறையொன்றை உள்ளூராட்சி அதிகாரசபைகளுடன் இணைந்து உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இத்தேவையை நிவர்த்தி செய்வதற்காக, செல்லப்பிராணிகளை அடக்கம்செய்தல், தகனம் செய்தல் மற்றும் தெரு நாய்களை பராமரிப்பதற்கான சேவைகளை வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் கெஸ்வை மற்றும் பிலியந்தலை உள்ளூராட்சி அதிகார சபைகளில் முன்னோடித் கருதிட்டமொன்றை செயற்படுத்த ரூபா 100 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

