உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை தனியாக ஸ்தாபிக்க யோசனை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை தனியாக ஸ்தாபிக்க யோசனை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை தனியொரு அலுவலக வளாகத்தில் ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

புதிய அலுகலக கட்டிடத் தொகுதியை ஸ்தாபிப்பதற்காக 2,000 மில்லியன் ரூபாயினை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

35.9 உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை தனியொரு அலுவலக வளாகத்தில் தாபித்தல்
முக்கிய உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அரசாங்க வருவாயினை ஈட்டுவதற்கு, பொறுப்பான நிறுவனங்களில் ஒன்றாவதுடன் டிஜிட்டல்மயப்படுத்தலின் நோக்கில் அதன் வரி சேகரித்தல் செயன்முறையை திசைப்படுத்துவது மிகவும் வினைத்திறன் மிக்கதாக மேற்கொள்ள முடியும்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினது பிரதான அலுவலகத்தினை அதன் தொடர்புபட்ட அலுவலகங்களை தனியொரு வளாகத்தினுள் இயக்குவதன் மூலம் எளிமையான, மிகவும் நம்பகமான மற்றும் வினைத்திறன்மிக்க சேவையினை வரிசெலுத்துனர்களுக்கு வழங்குவதற்கு சாத்தியமாகவிருக்கும் அதேவேளை, நிலைபேறான முறையில் வரி சேகரிப்புச் செயன்முறையை வலுப்படுத்தும். வரிசெலுத்துனர்கள் இந்நிறுவனத்தின் முக்கிய பயன்பெறுனர்களாவதால் தரமான சேவையினை அவர்களுக்கு வழங்குவதற்கு அவசியமான பெளதிக வசதிகளை அபிவிருத்திசெய்வது அத்தியவசியமாகும்.

அதற்கமைய முன்மொழியப்பட்ட இடங்களில் மிகப்பொருத்தமானதை தெரிவுசெய்து சாத்தியவள ஆய்வை நடாத்தியதன் பின்னர் புதிய அலுவலக கட்டிடத் தொகுதியைத் தாபிப்பதற்காக ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றோம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )