
தேசிய தீர்வை கொள்கையை நடைமுறைப்படுத்தல்
தற்சமயம் நடைமுறையில் உள்ள 0%, 15%, 20% தீர்வை வரி விகிதங்களை 2026 ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் வருமாறு தீர்வை விகிதங்களை 0%, 10%, 20%, 30% என்றவாறு தேசிய தீர்வை கொள்கையை நடைமுறைப்படுத்த முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
35.5 தேசிய தீர்வைக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்
தற்சமயம் நடைமுறையிலுள்ள 0%, 15%, 20% என்ற தீர்வை வரி விகிதங்களை, 2026 ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வருமாறு தீர்வை விகிதங்களை 0%, 10%, 20%, 30% என்றவாறு தேசிய தீர்வை கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் முன்மொழிகின்றோம்.
தீர்வை வரி அல்லாத இறக்குமதி வரிகளை படிமுறையாக நீக்குவது மேற்படி வரி விகிதங்களை மாற்றுவதன் இலக்காகும். அரசாங்கத்தின் வருமானத்தின் மீது குறைந்த தாக்கத்துடன் தீர்வை அல்லாத இறக்குமதி வரிகளை நீக்குவதற்காக, காலச்சட்டகமொன்றுக்கு அமைய திட்டமிட்டு நடைமுறைப்படுத்த முன்மொழிகின்றோம்.

