குஜராத் – லக்னோ அணிகள் இன்று மோதல்

குஜராத் – லக்னோ அணிகள் இன்று மோதல்

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (22) நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

குஜராத்: சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு, ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், கசிசோ ரபடா, அர்ஷத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

லக்னோ: மிட்செல் மார்ஷ், மார்க்ரம், ரிஷப் பண்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், ஷபாஸ் அகமது அல்லது எம்.சித்தார்த், வில்லியம் ஓ ரூர்கே.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )