டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் இதுவரையில் 15 மாவட்டங்களில் மொத்தம் 21,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 45 சதவீத டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மொத்தமாக பதிவாகியுள்ள 21ஆயிரத்து 439 நோயாளர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் ,”கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப்பு, கண்டி, காலி, மாத்தறை, திருகோணமலை, குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )