மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்புமூவர் காயம்

மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்புமூவர் காயம்

மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது நேற்று இரவு 9.20 அளவில் தலகொல்ல பகுதியில் மரம் ஒன்று விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தத்தில் காயமடைந்த இரண்டரை வயது சிறுமி மற்றும் மற்றொரு பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு சிறு குழந்தை உட்பட முச்சக்கர வண்டியில் சிக்கிய நால்வரை மீட்க பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை எடுத்தனர்.

காயமடைந்தவர்கள் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

37 வயதுடைய ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த இரண்டரை வயது சிறுமி, 48 வயது பெண் மற்றும் 57 வயது ஆண் ஆகியோர் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மரம் முறிந்து விழுந்ததில் அருகிலுள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மற்றும் அருகிலுள்ள கடைக்கும் சேதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதேவேளை மாவனெல்ல-ரம்புக்கன வீதி தலகொல்ல பகுதியில் மரம் விழுந்ததால் வீதி தற்போது தடைபட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு போலீசார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )