
மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் அடையாளம் தெரியாத நிலையில் சடலம் மீட்பு
கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கொத்மலை ஓயாவில் அடையாளம் தெரியாத மனித சடலம் இன்று (08) கண்டுபிடிக்கப்பட்டதாக லிந்துல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குநித்த சடலம் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் லிந்துல கொத்மலை ஓயாவின் மீது கட்டப்பட்ட பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டது.
கொத்மலைஓயாவில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் ஆற்றில் மிதக்கும் சடலத்தைக் கண்டு லிந்துல பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

