
சக்வித்தி ரணசிங்க மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
சட்டவிரோத நிதி நிறுவனத்தை நடத்தி, 16 கோடியே 41 இலட்சம் ரூபாவுக்கு மேல் பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகையாக பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, சந்தன வீரகுமார எனப்படும் சக்வித்தி ரணசிங்க மற்றும் அவரது மனைவி குமாரி அனுராதினி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது.
பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே, ஒவ்வொரு பிரதிவாதிக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இதற்கு மேலதிகமாக பிரதிவாதிகளுக்கு எதிராக தலா 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் செலுத்திய பின்னர் பிரதிவாதிகளின் கைரேகையை பதிவு செய்துவிட்டு, அவர்களை விடுவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

