
இலங்கை – துருக்கி பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு கூட்டுக் குழுவின் 3வது அமர்வு
இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுவின் (JCETC) மூன்றாவது அமர்வு இன்று (24) கொழும்பில் ஆரம்பமானது.
இந்த அமர்வுக்கு இலங்கை வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் துருக்கியின் தேசிய கல்வி அமைச்சர் யூசுப் டெக்கின் ஆகியோர் இணைத்தலைமை வகித்தனர்.

இந்த அமர்வின் மூலம், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

புதிய பொருளாதார வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப உடன்பாடுகள் குறித்து ஆராயும் நோக்கத்தில், இரு தரப்பிலிருந்தும் சிரேஷ்ட அரச அதிகாரிகள், முன்னணி வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த அமர்வின் மூலமாக வர்த்தகம், முதலீடு, கல்வி, உற்பத்தி, தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் துருக்கி – இலங்கை உறவுகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

