ஆர்டெமிஸ் II வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஓரியன் விண்கலம் இன்று பூமி திரும்பியது

ஆர்டெமிஸ் II வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஓரியன் விண்கலம் இன்று பூமி திரும்பியது

ஆர்டெமிஸ் II திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரப் பயணத்தில் ஈடுபட்ட ஓரியன் (Orion) விண்கலம், தனது நிலவு ஆய்வை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.

நாசா உறுதிப்படுத்தியதன்படி, ஓரியன் விண்கலம் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5.30 அளவில் கலிபோர்னியாவின் சான்டியாகோ கடற்கரைக்கு அப்பால் உள்ள பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

10 நாட்கள் நீடித்த இந்த சந்திரப் பயணத்தை மேற்கொள்வதற்காக, ஓரியன் விண்கலம் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நிலவை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.

இதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ் அவர்களால் 406,771 கிலோமீட்டர் (252,756 மைல்கள்) தூர சந்திரப் பயணத்தை நிறைவு செய்ய முடிந்தது. இந்த தூரம், பூமியிலிருந்து மனிதர்கள் இதுவரை பயணித்த அதிகபட்ச தூரமாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )