ஈரான் – அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தானில்

ஈரான் – அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தானில்

மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11) ஆரம்பமாகவுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சார்பாக,அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட குழுவினரும்,

ஈரான் சார்பாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) உள்ளிட்ட குழுவினரும் ஏற்கனவே பாகிஸ்தானை வந்தடைந்துள்ளனர்.

பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Baqer Qalibaf) சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான பில்லியன் கணக்கிலான ரியால் சொத்துக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற சில சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி கூட்டுத் தாக்குதலை நடத்தின.
அதனைத் தொடர்ந்து 40 நாட்களாக நீடித்த போர் மோதல்களுக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பாகிஸ்தானின் தலையீட்டுடன் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி முதல் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பி

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )