மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்து

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்து

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்று (28) காலை பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.

விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்க முயன்றபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் மோதியதாகவும், அதனைத் தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானத்தில் அஜித் பவார் உட்பட விமானிகள் மற்றும் உதவியாளர்கள் என மொத்தம் நால்வர் பயணித்துள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )