
கற்பிட்டி மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர்
கடந்த 21 ஆம் திகதி மாலை கற்பிட்டி, சின்னகுடியிருப்பு மீன்பிடி துறைமுகத்திலிருந்து படகில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் திரும்பி வராதமை குறித்து கற்பிட்டி போலீசாருக்கு நேற்று முறைப்பாடளிக்கப்பட்டது .
இதனடிப்படையில் தற்போது விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன ,
27 மற்றும் 34 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
கற்பிட்டி போலீசார் மற்றும் கடற்படையினர் இணைந்து காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka
TAGS Sri lanka

