
கம்பளை – தொலுவ வீதியில் விபத்து ; மூவர் பலி
கம்பளை – தொலுவ வீதியில் இன்று (06) இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரிகள் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வீதியால் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த சந்தர்ப்பத்தில் அந்த வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

