
கொட்டாவியால் ஏற்பட்ட விபரீதம்
கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்திற்கு அருகில் வாலிபர் ஒருவர் கொட்டாவி விட்டுள்ளார். ஆனால் கொட்டாவி விட்ட கண் இமைக்கும் நொடியில் அவரால் மீண்டும் வாயை மூடி இயல்பு நிலைக்கு வர முடியாமல் கடும் சிரமப்பட்டுள்ளார்.
இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பாலக்காடு ரயில்வே மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பி.எஸ்.ஜிதன் விரைந்து வந்து, சம்பந்தப்பட்ட வாலிபருக்கு உடனடி சிகிச்சை அளித்தார். இதையடுத்து அந்த வாலிபர் வாய் மூடி பேசிய நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
CATEGORIES India

