
கொடிகாமம் மந்தைவெளி கொலை வழக்கு ; இருவருக்கு மரண தண்டனை
யாழ்ப்பாணம், கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து, யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று (20) தீர்ப்பளித்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி, மந்தைவெளி பகுதியில் 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நீண்டகாலமாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.
வழக்குடன் தொடர்புடைய சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை விரிவாக ஆராய்ந்த நீதிபதி, குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுநர் தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மந்தைவெளி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இருவரையும் குற்றவாளிகளாகக் கண்ட நீதிபதி, அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
பிரதீபன்

