மின்சார தொழிற்சங்கம் 6 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்

மின்சார தொழிற்சங்கம் 6 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26) 06 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

பல சந்தர்ப்பங்களில் தங்கள் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவித்தபோதிலும் இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

அதன்படி, இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக நிதி துணை அமைச்சருடன் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலின் முடிவுகளின் அடிப்படையில் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படுமென சுங்க சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், கருப்பு பட்டை அணிந்து கடமையாற்றும் தொழிற்சங்க நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கீதாஞ்சன மடபத குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )