தடுப்புக் காவலில் இருந்த சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் இருந்த சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுரேஷ் சலே தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

அவரது உடல்நிலை குறித்து அறிந்த பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சந்திக்க அனுமதி கோரியிருந்த போதிலும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (24) அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் நீதவான் ஒருவர் நேரில் வந்து அவரைப் பார்வையிட்டு வைத்தியர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைத்தியர்களின் ஆலோசனைக்கமையவே அவர் தொடர்ந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )