ஆந்திராவில் பேருந்து தீக்கிரை ; 15 பேர் பலி

ஆந்திராவில் பேருந்து தீக்கிரை ; 15 பேர் பலி

ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீவிபத்து குறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து தீயை உடனடியாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )