தமிழ் கடவுள் முருகப்பெருமானின் திருநாமங்கள்

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் திருநாமங்கள்

தமிழ்க் கடவுளான முருகப்பெருமான் பல்வேறு திருநாமங்களில் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். “முருகா என்றழைக்கவா? முத்துக்குமரா என்றழைக்கவா? கந்தா என்றழைக்கவா? கதிர்வேலா என்றழைக்கவா? எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன்” என்று ஒரு பாடல் உண்டு. இதில் இடம்பெறும் முருகன் பெயரில் உள்ள அர்த்தங்களை புரிந்து கொள்ளுங்கள்.

* கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்

* விசாகன்: விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன்

* சண்முகன்: ஆறு முகங்களைக் கொண்டவன்

* சுவாமிநாதன்: சுவாமியான சிவனுக்கே நாதனாக விளங்கி பாடம் சொல்லியவன்

* மயில் வாகனன்: மயில் வாகனம் கொண்டவன்

* வள்ளி மணாளன்: வள்ளியை மணந்தவன்

* தேவசேனாதிபதி: தேவர்களுக்கெல்லாம் தலைவன்

* சேவற்கொடியோன்: சேவலை கொடியாகக் கொண்டவன்

* வேலாயுதன்: வேலை ஆயுதமாகக் கொண்டவன்

* முருகன்: இளமையானவன்

* முருகன் என்ற பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு பொருள் உண்டு. அவை:

‘மு’ என்றால் காக்கும் கடவுள் ‘முகுந்தன்’

‘ரு’ என்றால் அழிக்கும் கடவுள் ‘ருத்ரன்’

‘க’ என்றால் படைக்கும் கடவுள் பிரம்மா என்ற ‘கமலோற்பவன்’

‘முருகா’ என்பது மும்மூர்த்திகளும் இணைந்த பெயர் ஆகும். எனவே முருகனை வழிபட்டால் மும்மூர்த்திகளை வழிபட்ட பலன் கிடைக்கும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )