திடீரென குறைந்த தங்கத்தின் விலை 

திடீரென குறைந்த தங்கத்தின் விலை 

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (02) காலை முதல் அதிகரித்துக் காணப்பட்ட தங்கத்தின் விலையில், நண்பகலுக்குப் பின்னர் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

ர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுச் சந்தையில் நிலவும் கேள்வி (Demand) ஆகியவற்றுக்கு ஏற்ப, நண்பகலின் பின்னர் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாய் குறைவடைந்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 399,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,875 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )