
20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளது
கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்கள் மட்டுமே நீர் எஞ்சியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார இன்று (02) தெரிவித்தார்.
தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலை மற்றும் அதிகரிக்கும் நீர் நுகர்வு காரணமாக, எதிர்காலத்தில் குடிநீர் உற்பத்தியை ஓரளவு கட்டுப்படுத்த வேண்டிய நிலை உருவாகக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 50 நாட்கள் மட்டுமே நீர் எஞ்சியுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

