ஏர்பஸ் கொள்வனவு இலஞ்ச வழக்கு ; கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஏர்பஸ் கொள்வனவு இலஞ்ச வழக்கு ; கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிரைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சந்தேக நபருக்கு பிணை வழங்குவதற்கான எந்தவொரு விசேட காரணங்களும் முன்வைக்கப்படவில்லை. அதனால், கபில சந்திரசேனவை எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )