சில பகுதிகளில் 24 மணி நீர் வெட்டு

சில பகுதிகளில் 24 மணி நீர் வெட்டு

பாதுக்கை, ஹோமாகம மற்றும் பெலன்வத்தை பகுதிகளில் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களில் நீர் உற்பத்தி குறைந்துள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபையின் பொது முகாமையாளர் (மேற்கு மத்திய) திஸ்னா பன்னில தெரிவித்தார்.

நீர் வெட்டு அட்டவணை:

பாதுக்கை: இன்று (02) இரவு 8.00 மணி முதல் நாளை (03) இரவு 8.00 மணி வரை 24 மணிநேர நீர் வெட்டு. பின்னர் நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக நீர் விநியோகம். மீண்டும் ஏப்ரல் 7 அன்று நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

ஹோமாகம: ஏப்ரல் 3 இரவு 8.00 மணி முதல் 4 இரவு 8.00 மணி வரை 24 மணிநேர நீர் வெட்டு. பின்னர் நான்கு நாட்களுக்கு நீர் விநியோகம்.

பெலன்வத்தை: ஏப்ரல் 4 இரவு 8.00 மணி முதல் 5 இரவு 8.00 மணி வரை 24 மணிநேர நீர் வெட்டு. பின்னர் நான்கு நாட்களுக்கு நீர் விநியோகம்; மீண்டும் 9 ஆம் திகதி நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

திஸ்னா பன்னில பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மீண்டும் கேட்டுக்கொண்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )