லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய விலைத்திருத்த பட்டியல் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நிதி அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன், புதிய விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது.

இதனிடையே, நாட்டின் நுகர்வுக்குத் தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.” என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )