
குடிநீர் பற்றாக்குறையை கண்காணிப்பதற்கு விசேட குழு நியமனம்
குடிநீர் பற்றாக்குறையைக் கண்காணித்து திறம்பட நிர்வகிக்கும் நோக்கில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவர் மற்றும் பொது முகாமையாளரின் தலைமையில் ஒரு சிறப்பு வழிகாட்டுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக உருவாகியுள்ள நீர் தட்டுப்பாட்டை முகாமைத்துவப்படுத்துவதற்காக இக்குழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்குழு, நீர் விநியோகத்தை முறையாக கட்டுப்படுத்துதல், முன்னுரிமை பகுதிகளை அடையாளங்காணுதல் மற்றும் அவசர நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதுடன், நீர் சேமிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

